ராஜாக்கள் பாளையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் சீமைகருவேல மரங்கள் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

சிக்கல்: சிக்கல் அருகே ராஜாக்கள் பாளையம் செல்லும் கிராமச்சாலையின் இரு புறங்களிலும் மிகுதியாக வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால் விபத்து அபாயம் உள்ள நிலையில் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.
ராஜாக்கள் பாளையத்தில் இருந்து சிக்கல் செல்லும் பிரதான சாலையின் இரு புறங்களிலும் சாலையை மறைத்து சீமைக் கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் டூவீலர்களில் வருவோர் சீமை கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் வழி தெரியாமல் நேருக்கு நேர் மோதி விபத்தில் காயம் அடைகின்றனர்.
சிக்கல் அருகே காமராஜர்புரம் நாகராஜ் கூறியதாவது: இந்த ரோட்டில் ஏராளமான பொதுமக்கள் செல்லும் நிலையில் சீமைக் கருவேல மரங்கள் சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது. மாதத்திற்கு பத்திற்கும் அதிகமான விபத்துக்கள் தொடர்ச்சியாக நடக்கிறது. சிறைக்குளம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோர சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இது குறித்து முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கடலாடி யூனியன் அதிகாரிகள் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றார்.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி; காஷ்மீர் மக்கள் கொண்டாட்டம்!
-
பெருமை தரும் ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதமருக்கு நன்றி
-
‛ஆபரேஷன் சிந்தூர்' பெயர் ஏன்?
-
பாகிஸ்தானுக்கு நெத்தியடி கொடுத்த இந்திய ராணுவம்; ஆபரேசன் சிந்தூர் குறித்து நிபுணர்கள் கருத்து
-
பக்தர்கள் புகார் அளிக்க ஏற்பாடு
-
மாடியில் இருந்து குதித்த பெண் பலி