தெருநாய் கடித்த 10 பேருக்கு சிகிச்சை


சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம், அரியூர்நாடு பஞ்., தெம்பலம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் வெறிப்பிடித்து சுற்றி திரிகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அந்த வழியாக சென்ற, 10க்கும் மேற்பட்‍டோரை


தெருநாய் ஒன்று கடித்து குதறியது. காயமடைந்த அனைவரும், செம்மேடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால், அப்பகுதி மக்கள் தெருவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement