ரேஷன் கடை, அங்கன்வாடி மையம்: எம்.பி., திறப்பு


ப.வேலுார்:-

ப.வேலுார் அருகே, கொத்தமங்கலம் கிராம பஞ்.,ல், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 14 லட்சத்து, 8,000 ரூபாய் மதிப்பீட்டில் ரேஷன் கடை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 16 லட்சத்து, 55,000 ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா நடந்தது. நாமக்கல் தி.மு.க., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி தலைமை வகித்தார். கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
எம்.பி., ராஜேஸ்குமார், ரேஷன் கடை, அங்கன்வாடி மைய கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு, கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் பொது வினியோக திட்டம் விசாலாட்சி, கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் கள அலுவலர் நடராஜன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் சரவணன், மகேஷ்வரன், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement