நடைமேம்பாலத்தில் சமூக விரோதிகள் 'அட்டகாசம்' மின் கம்பங்களால் 'ஷாக்' அடிக்கும் அபாயம்

மின்வாரியம் கவனத்துக்கு



பல்லடம், உப்பிலிபாளையத்தில் மின்கம்பிகளுக்கு ஒட்டியபடி மரக்கிளைகள் செல்கிறது. அடிக்கடி தீப்பொறி பறக்கிறது. மரக்கிளைகளை வெட்ட வேண்டும்.

- செந்தில்குமார், உப்பிலிபாளையம். (படம் உண்டு)

பெருமாநல்லுார், பனங்காடு பகுதியில் மின்கம்பத்தில் செடி கொடிகள் படர்ந்துள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- குட்டிகுமார், பனங்காடு. (படம் உண்டு)

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் பாலத்தில் மின்கம்பத்தை சுற்றி முட்புதர்கள் வளர்ந்துள்ளது.

- ஜெயராஜ், அணைக்காடு. (படம் உண்டு)

குழியை மூட வேண்டும்

திருப்பூர், 15 வேலம்பாளையம், 25வது நம்பர் பஸ் நிற்கும் ஸ்டாப்பில், சாலை சேதமாகி குழியாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். குழியை மூட வேண்டும்.

- கார்த்தி, 15 வேலம்பாளையம். (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட் அருகே, புதுராமகிருஷ்ணபுரம் மெயின் வீதியில் குழாய் உடைந்து தினசரி தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சீர்செய்ய வேண்டும்.

- அமுதாநிலா, புதுராமகிருஷ்ணபுரம். (படம் உண்டு)

திருப்பூர், 51வது வார்டு, குறிஞ்சி நகர் விரிவு பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- மணிகண்டன், குறிஞ்சிநகர் விரிவு. (படம் உண்டு)

தெருவிளக்கு எரிவதில்லை

திருப்பூர், லட்சுமிநகர், முல்லை வீதியில் ஒரு வாரமாக தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்ற வேண்டும்.

- மணிகண்டன், முல்லைவீதி. (படம் உண்டு)

திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் கோவை பஸ்கள் நிற்குமிடத்தில் உயர்கோபுர மின்விளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றிட வேண்டும்.

- தினேஷ்குமார், காமராஜர் ரோடு. (படம் உண்டு)

திருப்பூர், பழைய எஸ்.பி., ஆபீஸ் அலுவலக அருகே, சிங்கார வேலன் நகர், செல்வலட்சுமி நகரில் இரண்டு வாரங்களாக தெருவிளக்கு எரிவதில்லை.

- லோகநாதன், செல்வலட்சுமிநகர். (படம் உண்டு)

குழியை மூட வேண்டும்.

திருப்பூர், லட்சுமி நகர் மெயின் ரோடு, அருணாச்சலேஸ்வரர் கோவில் வளைவில் தரைப்பாலம் குழியாகி ஆபத்தான நிலையில் உள்ளது. சீரமைத்திட வேண்டும்.

- சின்னான், லட்சுமிநகர். (படம் உண்டு)

வீணாகும் மின்சாரம்

திருப்பூர், கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்டில் மதிய வேளையிலும் தெருவிளக்குகள் தொடர்ந்து எரிவதால், மின்சாரம் வீணாகிறது.

- அண்ணாதுரை, கோவில்வழி. (படம் உண்டு)

சுத்தம் செய்யலாமே

திருப்பூர், அவிநாசி ரோடு, புஷ்பா ரவுண்டானா உயர்மட்ட பாலத்தில் இரவில் விரும்பதகாத செயல்கள் நடக்கிறது. குப்பை தேங்குவதால், சுகாதாரக்கேடாக உள்ளது.

- ஈஸ்வரன், அவிநாசி ரோடு. (படம் உண்டு)

குப்பை அள்ளுங்க...

திருப்பூர், தாராபுரம் ரோடு, பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும்.

- வின்சென்ட், பொல்லிக்காளிபாளையம். (படம் உண்டு)

திறப்பது எப்போது?

திருப்பூர், கருமாரம்பாளையம் ரேஷன் கடை அருகில் உள்ள துணை சுகாதார நிலையம், பணிகள் முடிந்து திறக்கப்படாமல் உள்ளது. திறந்தால் பலருக்கும் பயன்படும்.

- நடராஜன், தியாகி குமரன் காலனி. (படம் உண்டு)

--------------------------------

ரியாக் ஷன்

தெருவிளக்கு 'பளிச்'

திருப்பூர், அங்கேரிபாளையம், டீச்சர்ஸ் காலனி மூன்றாவது வீதியில் தெருவிளக்கு எரியவில்லை என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதமழில் . மாநகராட்சி வாயிலாக, தெருவிளக்கு மாற்றப்பட்டு, பளிச்சிடுகிறது.

- லோகநாதன், டீச்சர்ஸ்காலனி. (படம் உண்டு)

Advertisement