மாணவருக்கு மன அழுத்தம் தராத கல்வி எம்.ஜி.வி., குளோபல் அகாடமி பெருமிதம்

திருப்பூர்: திருப்பூர், அங்கேரிபாளையம் ரோடு, வெங்கமேடு பகுதியில் செயல்படும் எம்.ஜி.வி., குளோபல் அகாடமி பள்ளி, ஐ.சி.எஸ்.சி., பாட திட்டத்தில், மனநிறைவான கல்வியை போதித்து வருகிறது.

வெளியான தேர்வு முடிவில், நுாறு சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ள இப்பள்ளியில், 12ம் வகுப்பில், 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அதே போன்று, 10ம் வகுப்பு தேர்வில், 75 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், முதல் நிலை மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில், 98 சதவீத மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற கீர்த்தனாவின் தாய் ஐஸ்வர்யா கூறுகையில், ''9ம் வகுப்பில் தான் என் மகளை இந்த பள்ளியில் சேர்த்தேன்.

எவ்வித மன உளைச்சலுக்கும் இடமின்றி, எளிதாக பாடங்களை புரிந்துக் கொள்ளும் வகையில் பாடங்களை பயிற்றுவித்தனர். வெறும் புத்தக படிப்பு மட்டுமின்றி, பிற திறமைகளையும் ஊக்குவிக்கின்றனர். தனிப்பட்ட முறையில் மாணவர்கள் மீது கவனம் செலுத்துகின்றனர். என் மகளும் சிரத்தை எடுத்து படித்தாள்; அதனால், அவளால் சாதிக்க முடிந்தது. மன அழுத்தம் தராத கல்வியை எம்.ஜி.வி., குளோபல் அகாடமி வழங்கி வருகிறது,'' என்றார்.

மாணவி ஆதித்யா கூறுகையில், ''நீட்' உள்ளிட்ட பயிற்சிகளும் பள்ளியில் வழங்கப்படுகிறது. பிற திறமைகளை ஊக்குவிக்கும் கல்வியும் வழங்கப்படுவதால், கற்பித்தல் என்பது கடினமானதாக இல்லை,'' என்றார்.

பெற்றோர் மோகனராவ் கூறுகையில், ''எம்.ஜி.வி., பள்ளியில் ஐ.சி.எஸ்.சி., கல்வி முறையில் போதிக்கப்படுகிறது. இது, கடினம் என்ற மனநிலையை இப்பள்ளியின் கல்வி முறை மாற்றியமைத்திருக்கிறது; இப்பள்ளி, விளையாட்டு உள்ளிட்ட பிற திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், இயல்பாக மாணவர்கள் படிக்கும் சூழலை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது,'' என்றார்.

Advertisement