போக்குவரத்து போலீஸ் பெயரில் ரூ.1.50 லட்சம் சைபர் மோசடி
பெங்களூரு: பெங்களூரு, கெங்கேரி புறநகர் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தசாமி, 58. இவருடைய தாய் கங்கம்மா, 80. தாயின் வங்கிக் கணக்கை தன் மொபைல் போன் எண்ணுடன் இணைத்திருந்தார். கடந்த மாதம் 9ம் தேதி, வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட 'வாட்ஸாப்' எண்ணிற்கு போக்குவரத்து போலீசார் பெயரில் குறுந்தகவல் வந்தது.
அதில், 'போக்குரவத்து விதிகளை மீறியதற்காக அபராத தொகையை செலுத்த வேண்டும். அதற்கு இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் நீங்கள் கைது செய்யப்படுவீர்' என, கூறப்பட்டிருந்தது.
போக்குவரத்து போலீசார் குறுந்தகவல் அனுப்பியதாக நம்பிய அவரும், அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அடுத்து சில நிமிடங்களில் அவரது மொபைல் போன், 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது.
இதை அறியாத அவர், மொபைல் போன் வேலை செய்யவில்லை என நினைத்துள்ளார். சில நிமிடங்களுக்கு பின் மீண்டும் மொபைல் போன் இயங்க துவங்கியது. பின், அவரது தாய் வங்கிக் கணக்கில் இருந்து, 1.50 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக வங்கியில் இருந்து குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவானந்தசாமி, கெங்கேரி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து சைபர் நிபுணர்கள் கூறியதவாது:
மொபைல் போனில், 'பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோர்' தவிர வேறு எந்த தளங்களில் இருந்தும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது. 'ஆன்டி வைரஸ்' செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இது தரவுகளை பாதுகாப்பாக வைத்திருக்கும். அடையாம் தெரியாத நபர்கள் மட்டுமின்றி, தெரிந்தவர்கள் அனுப்பும் செயலிகளை கூட பதிவிறக்கம் செய்ய வேண்டாம். போக்குவரத்து போலீசார் அபராதம் தொடர்பாக எந்த தகவல்களையும், 'வாட்ஸாப்' மூலமாக அனுப்ப மாட்டார்கள்.
அபராத தொகையை போலீஸ் நிலையத்திலோ அல்லது அதிகாரப்பூர்வ வலைதளத்திலோ தான் கட்ட முடியும். மாறாக, எந்த செயலிகள் மூலமும் கட்ட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
ரோகித் சர்மா 'குட்-பை' * டெஸ்ட் அரங்கில் இருந்து...
-
வில்வித்தை: இந்தியா அசத்தல்
-
முஷீருக்கு 'ஜாக்பாட்' * மும்பை பிரிமியர் ஏலத்தில்
-
பைனலில் இந்திய பெண்கள் * தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்