கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக்கும் பயிற்சிகள்

திறமையைமெருகூட்ட வாங்க...



திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, கருமாரம்பாளையம் நகராட்சி பள்ளிகளில், கோடை கால இலவச கலை பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. ஐந்து முதல் பதினாறு வயதுக்கு உட்பட்ட, பள்ளி கல்வி பயிலும் மாணவர்களுக்கு கலை பயிற்சி அளித்து, திறமைகளை வெளிக்கொணரும் வகையில், ஜவஹர் சிறுவர் மன்றங்கள் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவை மண்டலத்தின் கீழ் செயல்படும் திருப்பூர் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்றத்தில், யோகா, பரத நாட்டியம், குரலிசை, ஓவிய கலை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அவ்வகையில், திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டிலுள்ள மண்ணரை மற்றும் கருமாரம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில், கோடை கால கலை பயிற்சிகள் துவங்கியுள்ளன.

ஐந்து முதல் 16 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு, கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும், 12ம் தேதி வரை, காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை, கலை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இலவச கலை பயிற்சியில், விருப்பமுள்ள மாணவர்கள் சேரலாம்.

மேலும் விவரங்களுக்கு, 96779 65555 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம். பயிற்சி நிறைவு செய்வோருக்கு, சான்றிதழ் வழங்கப்படும் என ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஓவியம் வரைய...சிற்பம் வடிக்க!



கோவை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில், திருப்பூர் மாவட்டத்தில், ஓவியம், சிற்ப கலைஞர்களுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ள ஓவியம், சிற்பம் பழகுநர்கள், தங்கள் பயோடேட்டா விவரத்தை, உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், மலுமிச்சம்பட்டி, கோவை - 641050 என்கிற முகவரிக்கு, வரும் 10ம் தேதிக்குள் கிடைக்கும்வகையில் அனுப்பி வைக்க வேண்டும். முதலில் பதிவு செய்யும் 50 கலைஞர்களுக்கு மட்டுமே முகாமில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் எனவும், பயிற்சி தேதி விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு, 0422 2610290, 89253 57377 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement