தீப்பிடித்து எரிந்த டிப்பர் லாரி

திருப்பூர் : திருப்பூர் அருகே மண் ஏற்ற சென்ற டிப்பர் லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி, 24. இவர் கடந்த ஏழு மாதங்களாக மங்கலம் அருகே தங்கி ஹாலோ பிளாக் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று அன்னுாரில் இருந்து மண் லோடு ஏற்றுவதற்காக டிப்பர் லாரியில் காரணம்பேட்டை சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாமளாபுரம், அய்யன் கோவில் பிரிவு அருகே சென்ற போது, லாரியின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. உடனே, லாரியை ரோட்டோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கியதும். லாரியின் முன்பகுதியில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. தகவலின் பேரில், பல்லடம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement