செந்துறை கோயில் விழா

செந்துறை: செந்துறை அருகே பெரியூர்பட்டி பூமாரியம்மன் கோயில் திருவிழா ஏப். 27ம் தேதி தீர்த்தம் அழைத்து வர காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது.

தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம், அக்னிசட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Advertisement