நாடக மேடை திறப்பு

வத்தலக்குண்டு: ஜி. தும்மலபட்டியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நாடக மேடையை நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி திறந்து வைத்தார்.

வத்தலக்குண்டு ஒன்றிய அ.தி.மு.க.,செயலாளர்கள் அன்னக்களஞ்சியம், சுதாகர் அவைத்தலைவர்கள் உதயகுமார், கோபால்,நகர செயலாளர் பீர்முகமது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன், சிறுபான்மை அணி செயலாளர் ஜான், முன்னாள் ஊராட்சித் தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குப்புசாமி, கிளை செயலாளர்கள், நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement