சாதனையாளர் விருது வழங்கும் விழா

திண்டுக்கல்: ஜே.சி.ஐ., திண்டுக்கல் வின்னர்ஸ், பத்மஸ்ரீ சவுந்தரராஜன் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய மாபெரும் இன்னிசைத் திருவிழா, சிறந்த சாதனையாளர் விருது வழங்கும் விழா திண்டுக்கல் நாயுடு கல்யாண மஹாலில் நடைபெற்றது.

டி.எம்.சவுந்தரராஜன் மகன் டி.எம்.எஸ்., செல்வகுமார், அங்குவிலாஸ் அதிபர் செல்லமுத்தையா கலந்து கொண்டனர்.சிறந்த கட்டுமான கம்பெனியாக செட்டினாட் கன்ஸ்ரக் ஷன்ஸ் ரவி தியாகராஜன், கலை அறிவியல் கல்லுாரிக்காக ஜி.டி.என்., ரத்தினம், ஜவுளி நிறுவனமாக என். பார்வதி டெக்ஸ்டைல்ஸ் சீனிவாசன், தொழில் முனைவோராக பாலவிக்னா வீவிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் பிரபு, ரியல் எஸ்டேட் நிறுவனமாக அரசன் ரியல் எஸ்டேட் சண்முகம், பல் மருத்துவராக ஜமுனா பல் மருத்துவமனை டாக்டர் அருண்சரத், சமூக சேவகராக அருள்ஜோதி, நகைக்கடைக்காக ஒரிஜினல் வாசவி நகை மாளிகை தினேஷ், ஸ்டார் ஓட்டலாக விவேரா கிராண்ட் நிறுவனர் வெங்கடாசலம், கல்வி புரவலராக சுந்தரராஜன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை ஜே.சி.ஐ., திண்டுக்கல் வின்னர்ஸ் தலைவர் சுனில் கவுதம், சப்தகிரி குமார் நரேஷ், முருகேசன், கமலஹாசன், சிவப்பிரகாஷ், நிஷாந்த், அருண் சரத், டி.எம்.எஸ்., நற்பணி மன்ற தலைவர் முகுந்த் பாலன் செய்திருந்தனர்.

Advertisement