'சிங்கப்பூர் பூங்காவுக்கு நிகர் பெங்களூரு பூங்காக்கள்'

பெங்களூரு : சிங்கப்பூர் பூங்காக்களில் உள்ளதை போல தரமான உபகரணங்கள் பி.பி.எம்.பி., பூங்காக்களில் இருப்பதாக ஆர்.சி.பி., அணியின் பேட்ஸ்மேன் டிம் டேவிட் பாராட்டி உள்ளார்.
பிரீமியர் லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்ஸ்மேனும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரருமானவர் டிம் டேவிட்.
இவர் சமீபத்தில் 'ஆர்.சி.பி., இன்சைடர் ஷோ' எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அவர் பெங்களூரு மாநகராட்சியின் கீழ் இயங்கும் பி.பி.எம்.பி., பூங்காக்களை பற்றி பெருமையாக பேசினார்.
இதை பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நேற்று தன், 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு, டிம் டேவிட்டுக்கு நன்றி தெரிவித்தது.
வீடியோவில் அவர் கூறியதாவது:
சிங்கப்பூரில் இருக்கும்போது தினமும் அதிகாலையில் பூங்காவிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வேன். இது தடைபடக்கூடாது என்பதற்காக பெங்களூரில் உள்ள பி.பி.எம்.பி., பூங்காக்களுக்கு தினமும் காலையில் சென்று பயிற்சி மேற்கொண்டேன்.
பி.பி.எம்.பி., பூங்காக்களில் உள்ள உபகரணங்கள், சிங்கப்பூர் பூங்காக்களில் உள்ளதைப் போலவே இருக்கின்றன. இது உடற்பயிற்சி செய்வதற்கு உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளது.
வரும் காலத்தில் அதிரடி பேட்ஸ்மேனாக ஆக விரும்புவோர், பி.பி.எம்.பி., பூங்காக்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ளுங்கள். இந்த பூங்காக்களை என் பயிற்சியாளர், எனக்கு அறிமுகம் செய்தார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
-
தேச விரோத பிரசாரங்கள் மீது நடவடிக்கை: அமித்ஷா அறிவுறுத்தல்
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம்; சுற்றுலா பயணிகளுக்கு என்.ஐ.ஏ., வேண்டுகோள்!
-
பும்ரா, ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்
-
நெஹ்ரா, பாண்ட்யாவுக்கு அபராதம்