கூவாகம் திருவிழா: எஸ்.பி., ஆய்வு

உளுந்துார்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., நேரில் ஆய்வு செய்தார்.

உளுந்துார்பேட்டை தாலுகா, கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் வரும் 14ம் தேதி நடக்கிறது.

அதற்கு முன்னதாக 13 ம் தேதி திருநங்கைகள், பக்தர்கள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த திருவிழாவில், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனால் திருவிழாவை அசம்பாவிதங்கள் இன்றி, அமைதியாக நடத்துவது குறித்தும், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எடுப்பது குறித்தும் எஸ்.பி. ரஜத்சதுர்வேதி நேற்று மாலை 6:00 மணிக்கு, கூவாகம் கூத்தாண்டவர் கோவில் பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Advertisement