நீரில் மூழ்கி சிறுவன் பலி
கடமலைக்குண்டு: தேனி அருகே நாகலாபுரம் ஸ்ரீரங்காபுரத்தைச் சேர்ந்தவர் கேசவன் மனைவி செல்வி, தனது மகன் ராகேஷ் 10, மற்றும் உறவினர்களுடன் கோம்பைத்தொழு அருகே உள்ள சின்னச்சுருளி அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர்.
சிறுவர்கள் சிலர் முன்கூட்டியே அருவிக்கு சென்று குளித்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பின் உடன் வந்திருந்த ராகேஷ் மட்டும் அப்பகுதியில் இல்லாததால் சிறுவனை தேடினர். அருவிக்கு கீழே தண்ணீர் தேங்கி இருக்கும் பள்ளத்தில் தேடிப் பார்த்தபோது தண்ணீருக்குள் மூழ்கிக் கிடந்துள்ளார். அவரை மீட்டு குமணன்தொழு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
-
டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி
-
கள்ளழகரை பார்க்கும் இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது சரிதானா அழகர்கோவில் பட்டர் சொல்வது என்ன
-
பஜாஜ் 'சேத்தக் 3503' இ.வி., ஸ்கூட்டர் 1 லட்சம் ரூபாயில், 155 கி.மீ., ரேஞ்ச்