ம.தி.மு.க., ஆண்டு விழா

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மாவட்ட ம.தி.மு.க., சார்பில், கட்சியின் 32வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொது மக்களுக்கு மோர், இனிப்புகளை வழங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர்கள் பொன்முடி, முருகன், வெங்கிட்டம்மாள், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், பிரபாகரன், நகரச் செயலாளர்கள் பெரியகருப்பன், ஆரோ செல்வம், பஷீர்கான், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement