வீரபாண்டியில் மொட்டையடிக்க ரூ.200 கட்டாய வசூலால் பக்தர்கள் அவதி

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் முடிக்காணிக்கை செலுத்த ரூ.200 கட்டாயமாக வசூலிக்கப்படுவதால் பக்தர்கள் அவதியடைகின்றனர்.

கோயில் சித்திரை திருவிழாவில் பலரும் வேண்டுதல்கள் நிறைவேற்றுவதற்காக முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர். முடிக்காணிக்கை செலுத்த முல்லை பெரியாற்றங்கரையில் தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள்து. முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்கள் பணம் செலுத்த தேவையில்லை என ஹிந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், பெரிய அளவில் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை.அங்கு முடிஎடுக்கும் பணியில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் ரூ.200 வழங்க வேண்டும் என கட்டாய வசூல் செய்கின்றனர். இதனால் பக்தர்கள் மனவேதனை அடைகின்றனர்.

இதுபற்றி கோயில் செயல் அலுவலர் நாராயணி கூறுகையில், 'முடிக்காணிக்கை செலுத்த பக்தர்கள் பணம், கட்டணம் செலுத்த தேவையில்லை. பக்தர்களிடம் வசூலிக்க கூடாது என பணிபுரிபவர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம். கோயில் ஊழியர்களும் மேற்பார்வை செய்கின்றனர். தொடர்ந்து கண்காணிக்கிறோம். வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

Advertisement