வேளாண் பல்கலையில் நீச்சல் பயிற்சி முகாம்

கோவை : இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற, நீச்சல் கற்றுக் கொள்ளும்படி, குழந்தைகள், பெரியவர்கள் பெண்கள் என அனைத்துத் தரப்பினருக்கும், கோவை வேளாண் பல்கலை அழைப்பு விடுத்துள்ளது.

கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு, பல்வேறு சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. ஓவியம், இசை, அழகிய கையெழுத்துப் பயிற்சி, சூழல் சுற்றுலா, அபாகஸ், ரோபோடிக்ஸ், மொழிப்பயிற்சிகள், கணினி பயிற்சி, சைக்கிளிங் என பல்வேறு சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இதில், நீச்சல் பயிற்சிக்கு தனி இடம் எப்போதும் உண்டு. கோவை வேளாண் பல்கலையில், நீச்சல் பயிற்சி முகாம் துவங்கியுள்ளது.

இதுதொடர்பாக, பல்கலையின், உடற்கல்வி துணை இயக்குநர் தேசிக சீனிவாசன் கூறியதாவது:

உடல் ஆரோக்கியத்துக்கு, நீச்சல் பயிற்சி நல்லது. தற்காப்புக்காகவும் கற்றுக் கொள்வது அவசியம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் கற்றுக் கொள்ளலாம்.

பல்கலை வளாகத்தில் காலை காலை 6:00 முதல் 9:00 மணி வரையும், மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரையும், பயிற்சி அளிக்கப்படுகிறது.

குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படும். பெண்களுக்கு, பெண் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்றுவிப்பதோடு, பெரியவர்களும் தாராளமாக கற்றுக் கொள்ளலாம். குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, 99405 15222 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.

Advertisement