நெஹ்ரா, பாண்ட்யாவுக்கு அபராதம்

மும்பை: போட்டியில் தாமதமாக பந்துவீசிய மும்பை அணியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பை அணி (155/8), 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியினடம் (147/7) தோல்வியடைந்தது.
இப்போட்டியில் மும்பை அணியினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறினர். இது, இரண்டாவது முறை என்பதால் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மும்பை 'லெவன்' அணியில் இடம் பிடித்த மற்ற வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து தலா ரூ. 6 லட்சம் அல்லது 6 சதவீதம் (குறைந்தபட்ச தொகை) அபராதமாக விதிக்கப்பட்டது.
போட்டியில் அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்து, நடத்தை விதிமுறைகளை மீறிய குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ராவுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம், ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டது.
மேலும்
-
ஜெய்ப்பூர் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
97 பெ்ண் ஓவியர்களின் கண்காட்சி
-
'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சூசகம்
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்; சவுதி அரேபியா அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
-
இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி; பாக்., நபர் பஞ்சாபில் சுட்டுக்கொலை
-
தமிழக அமைச்சரவை இலாகா மாற்றம்; ரகுபதியிடம் இருந்து சட்டத்துறை பறிப்பு