தைபே பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் வெற்றி

தைபே சிட்டி: தைபே ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி, உன்னதி ஹூடா வெற்றி பெற்றனர்.
சீனதைபேயில், 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சங்கர் முத்துசாமி மோதினர். அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-17, 21-18 என சீனதைபேயின் சியா ஹாவோ லீயை வீழ்த்தினார். இந்தியாவின் தருண் 21-17, 19-21, 21-12 என ஜப்பானின் ஷோகோ ஒகாவாவை தோற்கடித்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, அனுபமா உபத்யயா மோதினர். இதில் அசத்திய உன்னதி 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜெய்ப்பூர் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
97 பெ்ண் ஓவியர்களின் கண்காட்சி
-
'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சூசகம்
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்; சவுதி அரேபியா அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
-
இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி; பாக்., நபர் பஞ்சாபில் சுட்டுக்கொலை
-
தமிழக அமைச்சரவை இலாகா மாற்றம்; ரகுபதியிடம் இருந்து சட்டத்துறை பறிப்பு
Advertisement
Advertisement