பாரதியார் பல்கலைக்கு புதிய உடற்கல்வி இயக்குனர்

கோவை : பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குனராக, அண்ணாதுரை பொறுப்பேற்றுள்ளார்.
பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குனராக(பொ) இருந்த ராஜேஸ்வரன் கடந்த ஏப்., மாதம் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, பல்கலையில் கடந்த, 20 ஆண்டுகளாக உடற்கல்வித்துறை பேராசிரியராக பணிபுரியும் அண்ணாதுரைக்கு, உடற்கல்வி இயக்குனர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இவர் கடந்த, 2ம் தேதி முதல் உடற்கல்வி இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.
என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள இவருக்கு பேராசிரியர், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement