தேச விரோத பிரசாரங்கள் மீது நடவடிக்கை: அமித்ஷா அறிவுறுத்தல்

புதுடில்லி: மீடியாக்களில் வெளியாகும் தேச விரோத பிரசாரம் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுரை வழங்கியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா ராணுவம் மற்றும் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் நேபாள எல்லையை ஒட்டிய மாநிலங்களின் கவர்னர்கள் மற்றும் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது,
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை கிடைப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.
எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள மாநிலபேரிடர் நிவாரண படை , போலீசார் உள்ளிட்டோரை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்
அனைத்து மீடியாக்களிலும் வரும் தேச விரோத பிரசாரங்களை கண்காணிப்பதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்படக்கூடிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிப்பதுடன், தடையற்ற தொலைத்தொடர்பு வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அமித்ஷா அறிவுரை வழங்கி உள்ளார்.










மேலும்
-
பதற்றமான சூழலில் எல்லை தாண்டிய சீனர்கள் 4 பேர் கைது
-
ஜெய்ப்பூர் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
97 பெ்ண் ஓவியர்களின் கண்காட்சி
-
'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சூசகம்
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்; சவுதி அரேபியா அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
-
இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி; பாக்., நபர் பஞ்சாபில் சுட்டுக்கொலை