மண்டப கட்டளையின் மகத்துவம்
அவிநாசியில், தேரோடும் நான்கு ரத வீதிகளிலும், பல சமூகத்தினரின் மண்டபங்கள் அமைந்துள்ளன. தேர்த்திருவிழாவின் மற்றொரு சிறப்பு மண்டப கட்டளை. உற்சவ மூர்த்திகள் உள்பட தெய்வங்களை, ஒவ்வொரு சமூகத்தினரும் தங்கள் மண்டபங்களுக்கு அழைத்துச்சென்று, சொந்த பந்தங்கள் புடைசூழ, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்வித்து, வணங்கி மகிழ்ச்சி அடைவர்.
இந்த மண்டப கட்டளை வாயிலாக, ஆங்காங்கே உள்ள சொந்த பந்தங்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஓரிடத்தில் சங்கமிக்கின்றனர். தொலை துாரத்திலுள்ள உறவினர்களும், நேரில் சந்தித்து, பேசிக்கொள்வதால், புதிய திருமண சம்பந்தங்களும் நடக்கின்றன. அவிநாசியை பொறுத்தவரை பல்லாண்டுகளாக இந்த நடைமுறை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement