இந்தியாவுக்கு சாதகம்

தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஸ்காட்ச் விஸ்கி மற்றும் ஜின் மதுபானங்களுக்கான வரி, 150 சதவீதத்தில் இருந்து, 75 சதவீதமாக குறைக்கப்படும். 10வது ஆண்டில், 40 சதவீதமாக குறைக்கப்படும்.

அதுபோல, பிரிட்டனில் தயாராகும் கார்களுக்கான வரி, 100 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக குறையும். இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் மற்றும் தோல் பொருட்களுக்கான விலை, பிரிட்டனில் குறையும்.

தற்போதுள்ள வரி விதிப்புகளில் இருந்து, கிட்டத்தட்ட, 99 சதவீதப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதால், இந்தியாவுக்கு இது பெரும் சாதகமான பலனை அளிக்கும்.

இந்த ஒப்பந்தத்தை அடுத்து, 2030ம் ஆண்டில், இரு நாட்டுக்கு இடையேயான வர்த்தகம், இரட்டிப்பாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement