கூரை வீடு எரிந்து சேதம்

ரிஷிவந்தியம் : வாணாபுரம் அடுத்த சின்னக்கொள்ளியூரை சேர்ந்தவர் ஜானகி, 80; இவர், தனது கூரை வீட்டில் மளிகை கடை வைத்திருந்தார்.
நேற்று மதியம் 12:00 மணிக்கு, அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதில் வீட்டிலிருந்த நகை, பணம், ஆவணங்கள், துணி, மின்சாதனங்கள், கடையில் இருந்த பொருட்கள் உள்ளிட்டவை தீயில் கருகி சாம்பலாகின. பகண்டைகூட்ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement