மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ்

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில், 111 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, இலவச ரயில் பயண அட்டைகளை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், கடந்த ஜனவரியில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. இதில், 9 ஒன்றியங்களில் 2,300 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாமில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி, 111 மாணவ, மாணவியருக்கு இலவச ரயில் பயண அட்டை வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement