மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.

பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி, கடந்த ஏப்., 29,ம் தேதி முதல் இம்மாதம், 5,ம் தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, கலெக்டர் பிரசாந்த் பாராட்டினார். இதில்,சி.இ.ஓ., கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement