'நிட்ஜோன்' கண்காட்சி; 23ம் தேதி துவங்குகிறது
திருப்பூர்,: பின்னலாடை உற்பத்திக்கான அதிநவீன இயந்திரங்களுடன், 'நிட்ஜோன்' கண்காட்சி, வரும், 23ம் தேதி துவங்குகிறது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியை மேம்படுத்த, புதிய தொழில்நுட்பத்தில் உருவான இயந்திரங்கள், உதிரிபாகங்கள், 'அக்சஸரீஸ்' மற்றும் 'பேப்ரிக்ஸ்' நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி, 'நிட் ஜோன் எக்ஸ்போ' நிறுவனம் சார்பில், வேலன் ஓட்டல் கண்காட்சி வளாகத்தில், 23ம் தேதி துவங்கி, 26 ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து 'நிட்ஜோன் எக்ஸ்போ' நிர்வாகிகள் கூறுகையில், 'நிட்ஜோன் கண்காட்சியில், நவீன தொழில்நுட்பம் கொண்ட நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்பிராய்டரி, தையல் மெஷின்கள், உதிரி பாகங்கள், 'அக்சஸரீஸ்' மற்றும் 'பேப்ரிக்ஸ்' இடம்பெறும்.
குளிரூட்டப்பட்ட, 250 ஸ்டால்களுடன், 30 ஆயிரம் சதுரடியில், கண்காட்சி நடக்கிறது. பின்னலாடை தொழில்துறையினர் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்; 300 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக விசாரணை நடக்க வாய்ப்புள்ளது.
பின்னலாடை துறையினர், கண்காட்சியை பார்வையிட்டு, நவீன தொழில்நுட்பத்தால் உற்பத்தியை மேம்படுத்தலாம்.
கூடுதல் தகவல்களுக்கு, 95856 61121, 70944 55545, 98430 44332 என்ற எண்களில் அணுகலாம்,' என்றனர்.