மாரியம்மன் கோவில் திருவிழா விபத்து தடுக்க பேரிகார்டு தேவை



குளித்தலை, குளித்தலை, மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 4ல் தொடங்கியது. குளித்தலை சுற்றுப்பகுதி கிராம மக்கள், தினமும் அதிகாலையில் காவிரி ஆற்றில் நீராடி விட்டு, தீர்த்தக்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக, கோவில் கம்பத்திற்கு ஊற்றி சுவாமி தரிசனம் செய்து வருவர். பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து வரும்போது, கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன.

எனவே, போக்குவரத்து போலீசார் கோவில் திருவிழா முடியும் வரை, சுங்ககேட் பைபாஸ் பாலத்தில் இருந்து, பரிசல் துறை இடைப்பட்ட கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மூன்று இடங்களில் விபத்துகளை தடுக்கும் வகையில், பேரி கார்டு அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement