திருப்புறகோவில் சாலை சேதம் சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை

பவுஞ்சூர்:கடுமையாக பழுதடைந்துள்ள, திருப்புறக்கோவில் கிராமத்திற்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பவுஞ்சூர் அடுத்த திருப்புறக்கோவில் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
செய்யூர் - பவுஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் இருந்து திருப்புறக்கோவில் கிராமத்திற்குச் செல்லும் தார்ச்சாலை உள்ளது.
இந்த சாலை பழுதடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால், தினமும் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, திருப்புறக்கோவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குண்டு என கூறி கிண்டல்: 20 கி.மீ. துரத்தி நண்பர்களை துப்பாக்கியால் சுட்ட நபர்
-
பாகிஸ்தான் சொல்வது பொய்; மறுத்தது ஆப்கன் அரசு!
-
முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்: இந்தியா
-
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
-
இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை!
-
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
Advertisement
Advertisement