கோல்ப் ஜி.டி.ஐ., முன்பதிவு துவக்கம்

'போக்ஸ்வேகன்' நிறுவனத்தின் பிரபலமான 'கோல்ப் ஜி.டி.ஐ.,' என்ற ஹேட்ச்பேக் கார் இந்த மாத இறுதிக்குள் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த காரின் முன்பதிவு நேற்று துவங்கி உள்ளது.

இந்த கார், இறக்குமதி முறையில் இந்தியாவில் விற்பனையாக உள்ளது. முதற்கட்டமாக 250 கார்கள் விற்பனைக்கு வர உள்ளன.

'ஜி.டி.ஐ.,' என்பது போக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிவேக கார் மாடல் ஆகும். 'ஸ்டாண்டர்ட்' கோல்ப் காரை விட, இந்த 'ஜி.டி.ஐ.,' மாடல் கார் வேகமாக செல்லும் வகையில் ட்யூன் செய்யப்பட்டு உள்ளது.

இதில், 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த கார், 'மினி கூப்பர் எஸ்' காருக்கு போட்டியாக உள்ளது. இதன் விலை, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement