புதிய போப் தேர்வு செய்யும் பணி தீவிரம்; விரைவில் அறிவிக்க வாய்ப்பு

ரோம்: போப் பிரான்சிஸ் இறந்த நிலையில், அடுத்த போப் யார் என்பதை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் புதிய போப் குறித்து அறிவிப்பு வெளியாகும்.
உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், 88, இத்தாலியின் வாடிகன் சிட்டியில் ஏப்.,21ல் காலமானார். அவரது இறுதிச் சடங்கு செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது. போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியது.
புதிய போப்பை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. போப் தேர்வு செய்யப்பட்டார் என்பதை சிஸ்டைன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கியில் வெளியாகும் புகையின் நிறத்தை கொண்டு மட்டுமே அறிந்துக்கொள்ள முடியும். புகை போக்கியில் கறுப்பு நிற புகை வெளியானல் போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், வெள்ளை நிற புகை வெளியானால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டார் என்றும் அர்த்தம்.
இந்நிலையில், நேற்று போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர். நேற்று நடந்த கூட்டத்தில், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை. அதை குறிக்கும் வகையில் இரவு 9.05 மணிக்கு புகைபோக்கியிலிருந்து கரும்புகை வெளியேற்றப்பட்டது.
ஓய்வு எடுக்கச் சென்ற கார்டினல்கள், இன்று 2வது முறையாக கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவர். இந்த பணி புதிய போப் தேர்வு செய்யப்படும் வரை தொடரும்.




மேலும்
-
இந்தியா தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் பலி: உறுதி செய்தது ராணுவம்
-
பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!
-
நேபாளத்திற்கு 15 மின்சார வாகனம்; பரிசளித்தது இந்தியா
-
டில்லியில் இன்றும் 100 விமானங்கள் ரத்து
-
இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிக்கிறது: புதிய போப் முதல் உரை!
-
கேரளாவில் கார், டெம்போ மோதி கோர விபத்து: காரில் வந்த 4 பேர் உடல்நசுங்கி பலி