105 கிலோ போதை வஸ்து கடத்திய இருவர் கைது

குன்னுார் : கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கூடலூருக்கு வெங்காய மூட்டைகளுக்குள், 105 கிலோ போதை வஸ்துக்கள் மறைத்து, கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சத்தியமங்கலம் வழியாக, நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதிக்கு போதை வஸ்துக்கள் கடத்துவதாக, குன்னுார் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
குன்னுார் டி.எஸ்.பி., ரவி தலைமையில், குற்றப்பிரிவு போலீசார் ரமேஷ், ஜார்ஜ், பாட்சா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு அருவங்காடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது,'மினி பிக்--அப்' வாகனத்தில் வெங்காய மூட்டைகளுக்குள், மறைத்து வைத்து, கடத்தி வந்த, 105 கிலோ போதை வஸ்துக்களை, வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் அருவங்காடு போலீசார் விசாரணை நடத்தி, நாடுகாணியை சேர்ந்த சிவக்குமார், 40, கூடலுாரை சேர்ந்த சந்திப்,38, ஆகியோரை கைது செய்தனர். ஆய்வு மேற்கொண்ட, நீலகிரி எஸ்.பி., நிஷா கூறுகையில், ''கூடலூர் சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சத்தியமங்கலம், குன்னுார் பர்லியார் வழியாக கடத்தி வரப்பட்ட போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனை பிடித்த குழுவினர் ஏற்கனவே பல போதை வஸ்துக்கள் பிடித்துள்ளனர். இவர்களுக்கு வெகுமதியும் அளிக்கப்படும்,'' என்றார்.
மேலும்
-
இந்தியா தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் பலி: உறுதி செய்தது ராணுவம்
-
பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!
-
நேபாளத்திற்கு 15 மின்சார வாகனம்; பரிசளித்தது இந்தியா
-
டில்லியில் இன்றும் 100 விமானங்கள் ரத்து
-
இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிக்கிறது: புதிய போப் முதல் உரை!
-
கேரளாவில் கார், டெம்போ மோதி கோர விபத்து: காரில் வந்த 4 பேர் உடல்நசுங்கி பலி