ஆடு, மாடுகள் திருட்டு விவசாயிகள் அச்சம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆடு, மாடுகள் திருட்டு தொடர்வதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
விழுப்புரத்தில் நகர மற்றும் புறநகர் குடியிருப்பு பகுதிகளில், ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்ம கும்பல், வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், ஆடு, மாடுகளையும் மர்ம நபர்கள் திருடிச் செல்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் சாலாமேடு மீனாட்சி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி குமார், ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். அவரது வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த ரூ. 80 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பசு மாடுகள் கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது வீட்டில் கட்டியிருந்த 3 ஆடுகளும், ரவி என்பவரது வீட்டிலிருந்த கட்டி வைத்திருந்த ஒரு ஆட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நள்ளிரவு வரும் மர்ம நபர்கள், ஆடு மாடுகளை திருடி வாகனத்தில் ஏற்றி செல்வதாக அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். நகை பணம் திருடுவதுபோல், தற்போது ஆடு, மாடுகள் திருட்டு அதிகரித்து உள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
புகார் அளிக்க அழைப்பு
-
அட்டப்பாளையம் காட்டில் கழிவுநீர் கொட்டி அட்டூழியம் வனஉயரினங்களின் வாழ்விடங்கள் கேள்விக்குறி
-
சோழவரம் ஏரிக்கரை சீரமைப்பு பணி முழு கொள்ளளவு தண்ணீர் சேமிக்க திட்டம்
-
லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் வாழைத்தார் ஏலம்
-
கிடப்பில் ரயில்வே சுரங்கப்பாதை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
-
ஆர்.டி.மலையில் தேர்த்திருவிழா 5வது நாள் மண்டகப்படி பூஜை