லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் வாழைத்தார் ஏலம்
கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, வாழைக்காய் கமிஷன் மண்டிகளில் வாழைத்தார்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் வாழை மரங்களுக்கு சில இடங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாழைத்தார்கள் விலை சற்று உயர்ந்து வருகிறது.
நேற்று பூவன் வாழைத்தார், 350 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 250 ரூபாய்க்கு விற்பனையானது. வாழைத்தார்களை கரூர், திருச்சி மற்றும் உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர். வாழைத்தார்கள் ஒவ்வொன்றும் கடந்த வாரத்தை காட்டிலும், 50 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும்
-
26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு
-
விளையாட்டு விடுதி தேர்வு போட்டி
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்று 'அசத்தல்' உயிரியியல் பிரிவில் சாதனை
-
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்
-
கள்ளக்குறிச்சியில் வேல் வழிபாடு
-
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: 82 பேர் ஆஜர்