ரவுடியின் பெயரை சொல்லி மாமூல் வசூலித்த வக்கீல் கைது

கொடுங்கையூர்,
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உட்பட 27 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நாகேந்திரனின் உறவினர்கள் வீடுகளில் கடந்த 7ம் தேதி போலீசார் சோதனை நடத்தி, 51 கத்திகளை பறிமுதல் செய்து, நாகேந்திரனின் உறவினர்கள் உள்ளிட்ட ஏழு பேரை, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நாகேந்திரனின் 2வது மகனான அஜித்ராஜ், 29, என்பவர், நேற்று முன்தினம் வியாசர்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அஜித்ராஜ் கொடுத்த ததகவலின்படி, ரவுடி நாகேந்திரன் பெயரை சொல்லி கட்ட பஞ்சாயத்து செய்து மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில், புரட்சி பாரதம் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அணி மாநில இணை செயலரும், வழக்கறிஞருமான பட்டாபிராம், குமரன் நகரைச் சேர்ந்த இளங்கோவன், 54, என்பவரை, கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement