சென்னிமலையில்15.80 மி.மீ., மழை



ஈரோடு:சென்னிமலையில் அதிகபட்சமாக, 15.80 மி.மீ., மழையளவு பதிவானது.ஈரோடு மாவட்டத்தில் இரண்டு மாதங்களாகவெயில் சுட்டெரித்து வருகிறது. ஆனால் மழை பொழிவு இல்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பரவலாக லேசான மழை பெய்தது. மொடக்குறிச்சியில், 5.20, பெருந்துறை, 4, வரட்டுபள்ளம் அணை, 2.30, கோபி, 6.20, குண்டேரிபள்ளம் அணை, 2.60, பவானிசாகர் அணை பகுதியில், 11 மி.மீ., மழை பதிவானது.

Advertisement