3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு

புதுடில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக விமானப் பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால், பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த தாக்குதல் சம்பவங்களால் இந்திய எல்லை மாநிலங்களில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், விமான நிலையங்கள், ரயில்நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக எல்லையோரங்களில் உள்ள ஸ்ரீநகர், சண்டிகர், அமிர்தரஸ், ஹல்வாரா, பாட்டியாலா, சிம்லா, கங்ரா, பட்டின்டா, ஜெய்சால்மர், ஜோத்பூர் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விமானப் பயணிகள், விமான நிலையங்களுக்கு 3 மணிநேரத்திற்கு முன்பே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவுப்படி, விமான நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட இருப்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு சோதனைகள் அதிகரித்துள்ளதால், விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜம்மு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டுகளை கட்டணமின்றி ரத்து செய்யலாம் என்று ஏர் இந்தியா உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.



மேலும்
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: தலையிட உலக வங்கி மறுப்பு
-
எல்லையோர மக்களின் பாதுகாப்பு: குஜராத் முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை
-
ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியது மத்திய அரசு; ராணுவ பலத்தை அதிகரிக்க நடவடிக்கை
-
அண்ணே..அண்ணே..பாடலால் வந்த பிரச்னை..கங்கை அமரனின் கலகலப்பு