ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து தர்ணா

விருதுநகர்: விருதுநகரில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து தர்ணா நடந்தது.

ஆமத்துாரில் நீர்வரத்து கால்வாய்கள், வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் விருதுநகர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா செய்தனர். ஆக்கிரமிப்பை அகற்றுவதாக கூறிய நிலையில் திடீரென ஏன் நிறுத்தினீர்கள் என கேள்வி எழுப்பினர். தாசில்தார் ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழ்விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் நாராயணசாமி கூறுகையில், “ஆக்கிரமிப்பை எடுப்பதாக வருவாய்த்துறை கூறிய நிலையில், முன்தின இரவு 10:00 மணிக்கு எடுக்க கூடாது என மாவட்ட நிர்வாகம்உத்தரவிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

உத்தரவு நகல் கேட்டோம். கொடுக்கவில்லை. அடுத்தகட்ட போராட்டங்கள் செய்ய உள்ளோம்,” என்றார். மாநில தலைவர் நாராயணசாமி, பொருளாளர் சுப்பாராஜ், மாவட்ட தலைவர் பாஸ்கரன் விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement