போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாக்., தாக்குதல்: இந்தியா பதிலடி

ஸ்ரீநகர்: போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து டுரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
@1brஇந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த ராணுவ தாக்குதல்கள் இன்று மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இருந்தனர்.
இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்வையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சண்டை நிறுத்தம் என்று இரு நாடுகளும் அறிவித்த 3 மணி நேரத்தில் கதுவா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் தொடர்ந்துள்ளது. பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் வகையில் பாக்., ராணுவம் தாக்கி வருகிறது. இதற்கு இந்தியாவும் உடனடி பதிலடி கொடுத்தது.
ஜம்மு, ரியாஷி ,ஸ்ரீநகர், ரஜோரி, கந்தர்பால் பகுதிகளில் பாகிஸ்தான் டுரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமையகத்தையும் தாக்க பாகிஸ்தான் முயற்சித்துள்ளது.
ஆர்எஸ்புரா பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது.
நக்ரோட்டாவிலும் பாக்., அனுப்பிய டுரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் பல டுரோன்கள் வந்ததாக அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். இதில் 3 டுரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பஞ்சாபின் மோகா மாவட்டத்திலும் டுரோன் காரணமாக மின்தடை அமல்படுத்தப்பட்டது. பசில்கா, பாட்டியாலாவிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.அமிர்தசரஸ் பகுதியில் மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து டுரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.
ஒப்பந்தம் மீறல்!
இதனிடையே, பாகிஸ்தான் அத்துமீறிய நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு வட்டாரங்கள், ' இன்று( மே 10) மாலை போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது,' என தெரிவித்தன.
ஆலோசனை
இந்நிலையில், பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியது தொடர்பாக பிரதமர் மோடி
உமர் அப்துல்லா கேள்வி
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது;
சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் காஷ்மீரில் குண்டுசத்தம் கேட்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
ராஜஸ்தானின் பார்மர் , ஜெய்சால்மர் , பஞ்சாபின் பிரோஸ்பூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (21)
Ganesh - Chennai,இந்தியா
10 மே,2025 - 23:53 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
10 மே,2025 - 23:41 Report Abuse

0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
10 மே,2025 - 23:28 Report Abuse

0
0
Reply
sethusubramaniam - chennai,இந்தியா
10 மே,2025 - 23:11 Report Abuse

0
0
Reply
முருகன் - ,
10 மே,2025 - 23:10 Report Abuse

0
0
Reply
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
10 மே,2025 - 23:01 Report Abuse

0
0
Reply
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
10 மே,2025 - 22:54 Report Abuse

0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
10 மே,2025 - 22:43 Report Abuse

0
0
Reply
Bharathi - ,
10 மே,2025 - 22:30 Report Abuse

0
0
Reply
Anonymous - ,
10 மே,2025 - 22:25 Report Abuse

0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் மார்பில் வாள் தாங்கும் நிகழ்ச்சி
-
ஏ.டி.எம்., கார்டை மாற்றி மோசடி 5 மாதத்துக்கு பின் வாலிபர் கைது
-
பிரதோஷத்தை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரருக்கு பூஜை
-
மேல்மலையனுாரில் தி.மு.க., பொதுக்கூட்டம்
-
ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி
-
வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதனுக்கு நியூயார்க் பல்கலை டாக்டர் பட்டம்
Advertisement
Advertisement