இலங்கைக்கு கடத்த இருந்த 105 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகப்பட்டினம்:வேதாரண்யத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்கு கொண்டு சென்ற, 105 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை பகுதிகளில் இருந்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் தொடர்ந்து வருகிறது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எஸ்.பி., தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவல்படி, தோப்புத்துறை பகுதியில் வந்த இத்தியோஸ் காரை (எச்.ஆர்55-ஏ.எப்5846) நிறுத்தி சோதனையிட்டனர்.
காரில் 105 கிலோ கஞ்சா பொட்டங்கள் இருந்தது. காரில் இருந்த ஆந்திரா மாநிலம், நெல்லூர், முத்தயால்பாடு பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணா ரெட்டி, 28; என்பவரை கைது செய்து, கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, வேதாரண்யம் நபர் மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
மேலும்
-
பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!
-
இந்தியா - பாக்., போர் நிறுத்தம்: தலைவர்கள் வரவேற்பு
-
முடிவுக்கு வந்தது போர்; காஷ்மீரில் இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாட்டம்!
-
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னரே தொடங்கும்; வானிலை மையம் அறிவிப்பு
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிந்தது முறிந்தது தான்: மத்திய அரசு
-
போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் மாற்றமில்லை: ஜெய்சங்கர்