சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிந்தது முறிந்தது தான்: மத்திய அரசு

புதுடில்லி: '' சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை,'' என மத்திய அரசு கூறியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதரக ஊழியர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், இங்கிருந்த தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றப்பட்டனர்.
பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் பாகிஸ்தானில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து பாகிஸ்தான் செய்த அனைத்து விஷயங்களும் பதற்றத்தை அதிகரிக்க செய்தது. அந்நாட்டிற்கு தான் இழப்பு ஏற்பட்டது. அந்நாட்டின் விமானப்படை விமானங்கள், டுரோன்கள் ஆகியன தாக்கி அழிக்கப்பட்டன.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. வரும் 12ம் தேதி மாலை பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை . பாகிஸ்தான் தரப்பானது, இந்தியாவை தொடர்பு கொண்ட பிறகு இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஏற்பட்டது. போருக்கு முந்தைய அல்லது பிந்தைய என எந்த நிபந்தனையும் கிடையாது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடரும். இந்தியா எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தொடர்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையில் மாற்றம் கிடையாது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





மேலும்
-
59 வாகனங்களில் குறைபாடு ஆத்துார் வட்டார போக்கு
-
இன்று இனிதாக ... (11.05.2025) புதுடில்லி
-
பாதுகாப்பு வசதிகள் 100 சதவீதம் சரியாக இருந்தால்தான் தகுதிச்சான்று'
-
கொலை, பலாத்கார வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டார்
-
கோவில் திருவிழா தொடர்பாக தாலுகா ஆபீசில் பேச்சுவார்த்தை
-
ஜாதி, மதம், அரசியலை மறப்போம் ஆம் ஆத்மி எம்.பி., அறிக்கை