போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் மாற்றமில்லை: ஜெய்சங்கர்

3

புதுடில்லி: ''இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், பயங்கரவாதத்திற்கு எதிரான நமது உறுதியான மற்றும் சமரசமில்லாத கொள்கை தொடரும்,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவும், பாகிஸ்தானும், இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் துப்பாக்கிச்சூடு மற்றும் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்காக பரஸ்பரம் ஒரு ஒப்பந்தத்தை போட்டு உள்ளன. அனைத்து வடிவிலும் பயங்கரவாதம் மற்றும் அதன் செயல்பாடுகளுக்கு எதிராக உறுதியான மற்றும் சமரசம் இல்லாத கொள்கையை இந்தியா கடைபிடித்து வருகிறது. அது எதிர்காலத்திலும் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement