ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் பூவந்தி அருகே ஒருவர் கைது

சிவகங்கை:சிவகங்கை மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ., அன்புதாசன் தலைமையிலான போலீசார் பூவந்தி அருகே மதுரை -- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.
அதில் 38 மூடைகளில் 40 கிலோ வீதம் மொத்தம் 1,520 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த முத்துமுருகனை 38, கைது செய்தனர். அந்த பகுதி மக்களிடம் ரேஷன் அரிசியை சேகரித்து பூவந்தியில் உள்ள கோழிப்பண்னைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதில் தொடர்புடைய சரக்கு வாகன உரிமையாளர் வெற்றிவேலை போலீசார் தேடிவருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவு
-
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாக்., தாக்குதல்
-
'ஆப்பரேஷன் சிந்தூர்' பெயரில் வர்த்தக முத்திரையா: சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு
-
பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!
-
இந்தியா - பாக்., போர் நிறுத்தம்: தலைவர்கள் வரவேற்பு
-
முடிவுக்கு வந்தது போர்; காஷ்மீரில் இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாட்டம்!
Advertisement
Advertisement