ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா ரூ.12 லட்சத்திற்கு குத்தகை ஏலம்
கீழக்கரை: ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராஹீம் பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஏர்வாடி ஊராட்சி சார்பில் குத்தகை ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு ஏர்வாடி ஊராட்சி அலுவலகத்தில் நடந்த குத்தகை ஏலத்திற்கு மண்டல அலுவலர் மோகன் தலைமை வகித்தார். குத்தகை ஏலத்தின் விதிமுறைகளை வாசித்துக் காட்டி ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், அதற்கான காசோலை வழங்க வேண்டும் என கூறப்பட்டது.
அதனடிப்படையில் இரண்டு குத்தகைதாரர்கள் காசோலை வழங்கினர். பின்னர் குத்தகை ஏலம் ஆரம்பிக்கப்பட்டதில் ரூ.12 லட்சத்திற்கு குத்தகை ஏலம் விடப்பட்டது. இதற்கான தொகையை ஊராட்சி வங்கி கணக்கில் காசோலையாக எடுத்து அதிகாரிகளிடம் வழங்கினர்.
கடலாடி பி.டி.ஓ., ஜெய ஆனந்த், வட்டார வளர்ச்சி துணை அலுவலர்கள் ரவிக்குமார், முருகவேல், ஊராட்சி செயலர் செல்லத்துரை உட்பட ஏர்வாடி போலீசார் உடனிருந்தனர்.
மேலும்
-
புதிய பட்டய படிப்பு ஐ.ஐ.டி.,யில் அறிமுகம்
-
மாகரலில் குழாய் உடைந்து வீணாகும் செய்யாற்று குடிநீர்
-
ஊறுகாய்க்கு ஜி.எஸ்.டி., குறைக்க வலியுறுத்தல்
-
மண் திட்டுகளால் துார்ந்த கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
-
ஹஜ் பயணம் 5,650 பேருக்கு அரசு மானியம்
-
பல் மருத்துவ கிளினிக்கை விரிவுபடுத்த பணம் வாங்கி ஏமாற்றிய டாக்டர் கைது