இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்; சவுதி அரேபியா அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழலில் நிலவி வரும் நிலையில், சவுதி அரேபியா வெளியுறவுத்துறை இணை அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
கடந்த ஏப்.,22ம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தியாவும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது. இதனால், இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், திடீர் பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்-அல்ஜுபைர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், "பயங்கரவாதத்தை இந்தியா எதிர்க்கும் விதம் குறித்து சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்-அல்ஜுபைர் உடன் ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டார்.
அதேபோல, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி நேற்றிரவு டில்லி வந்தார். இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் சம்பவம் குறித்து அமைச்சர் ஜெய்சங்கருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
மேலும்
-
கரையான் அரித்த ரூ.1 லட்சம்: ஏழை பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ்
-
இந்தியா தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் தான்: வெளியுறவு செயலர் உறுதி
-
“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை எதிரொலி: படும் பாதாளத்தில் பாகிஸ்தான் பங்குச்சந்தை!
-
ராணுவ வீரர்களால் பெருமை: ராஜ்நாத் சிங்
-
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்; லாகூரில் வான் பாதுகாப்பு கவச வாகனம் அழிப்பு!
-
அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் அறிவுரை