97 பெண் ஓவியர்களின் கண்காட்சி

1



பாண்டிச்சேரி ஆர்ட் அகடெமியின் 8 வது தேசிய அளவிலான பெண் ஓவியர்களின் கண்காட்சி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள லலித் கலா அகடமியில் நடைபெற்றது.
Latest Tamil News
இந்த ஓவிய கண்காட்சியின் நாடு முழுவதிலும் உள்ள 97 பெண் ஓவியர்கள் வரைந்திட்ட 200 ஓவியங்கள் இடம் பெற்றிருந்தது.
Latest Tamil News
பாண்டிச்சேரி ஆர்ட் அகாடெமியானது பெண் ஓவியர்களின் ஓவியத்திறனை மேம்படுத்தும் பணியில் கடந்த 14 வருடகாலமாக செயல் பட்டு வருகின்றது.அதன் ஒரு கட்டமாக நடைபெற்ற இக்கண்காட்சியை, மூத்த பெண் ஓவியர் பிரேமலதா சேஷாத்ரி துவக்கி வைத்தார். அகடமியின் செயலாளர் ஓவியர் ஸ்ரீதளாதேவி வாழ்த்துரை வழங்கினார்.
கண்காட்சியின் கேட்டலாக் புத்தகத்தை மூத்த பெண் ஓவியர் மற்றும் கலாக்ஷேத்ராவின் விசுவல் ஆர்ட்ஸ் துறையின் முன்னாள் தலைவர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். முதல் புத்தகத்தை பெண் ஓவியர் மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின், உறுப்பினர் செயலாளர் சுதா ராமன் பெற்றுக்கொண்டார். சிறப்பு விருந்தினராக ஓவியர் மற்றும் லலித் கலா அகடேமியின் மண்டல செயலாளர் சோவன் குமார் பங்கேற்றார். அகடெமியின் தலைவர், மூத்த ஓவியர் சேகர் நன்றி கூறினார்.
Latest Tamil News
சிறப்பு நிகழ்வாக 'வந்து ஓவியம் வரையுங்கள்' என்ற பிரேத்யேக நிகழ்வில் பல பெண் ஓவியர்கள் பங்கேற்றனர்.புதுசேரியை சேர்ந்த தேசிய ஓவியர், மன்றும் பாரதியார் பல்கலை கூடத்தின் விரிவுரையாளர் . திருநாவுக்கரசுவின் நேரடி ஓவிய டெமோவும் நடைபெற்றது.
Latest Tamil News
கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
Latest Tamil News

தகவல்,படங்கள் உதவி :ஒவியர் ஸ்ரீதளாதேவி



Advertisement