மதுரை வந்தது தங்கக்குதிரை வாகனம்

அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக தங்கக்குதிரை வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம் அழகர்கோவிலில் இருந்து மதுரை வந்தன.
கள்ளழகர் சித்திரை திருவிழா மே 8 முதல் 17 வரை நடக்கும்.ஏப். 27ல் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் முகூர்த்தகால் நடப்பட்டது. நேற்றும் இன்றும் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு பூஜை, தோளுக்கினியான் நிகழ்வு நடக்கும்.
கள்ளழகர் மலையிலிருந்து புறப்படும் தங்கப்பல்லக்கிற்கும் முக்கிய நிகழ்வுகளில் எழுந்தருளும் வாகனங்களுக்கும் பாலீஷ் செய்து தயாராக வைக்கப்பட்டன.
தங்கக் குதிரை வாகனம் நேற்று காலை மலையிலிருந்து புறப்பட்டு தல்லாகுளம் வந்தது. சேஷவாகனம் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலிலும், கருட வாகனம் தேனுார் மண்டபத்திலும் டிராக்டர்களில் எடுத்துச் செல்லப்பட்டு இறக்கிவைக்கப்பட்டன.
சித்திரை திருவிழாவிற்காக மட்டுமே கள்ளழகர் இந்த வாகனங்களில் எழுந்தருளுவார்.
ரோடுகள் சீரமைக்கப்படுமா
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகே செல்லுார் நோக்கி செல்லும் வடகரை ரோடு மோசமாக உள்ளது. குறிப்பாக ஏ.வி., பாலத்தின் கீழ் பகுதியில் வாகனங்கள் தடதடத்துச் செல்கின்றன.
இப்பகுதியில் ரோட்டை சமப்படுத்த வேண்டும். ஆழ்வார்புரம், செனாய் நகர் சந்து பகுதிகளிலும் ரோட்டை சரிசெய்வது நல்லது. இதேபோல் அண்ணாநகர், தாசில்தார் நகர், சதாசிவநகர், வண்டியூர் பகுதியில் அணுகு ரோடுகள் மோசமாகவே உள்ளன.
பக்தர்கள் நலன்கருதி மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை சீரமைக்க வேண்டும்.
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு