ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
சிவகங்கை:பூவந்தி அருகே, மினி சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட, ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பூவந்தி அருகே மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.
அதில், 38 மூட்டைகளில் 40 கிலோ வீதம் மொத்தம் 1,520 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. வாகனத்துடன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த டிரைவர் முத்துமுருகனை 38, கைது செய்தனர். அப்பகுதி மக்களிடம், ரேஷன் அரிசியை வாங்கி, பூவந்தியில் உள்ள கோழிப்பண்னைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
இதில் தொடர்புடைய, சரக்கு வாகன உரிமையாளர் வெற்றிவேலை போலீசார் தேடிவருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெட் படம் 'தோல்வி அவமானல்ல; வெற்றிக்கான அடையாளம்' 'ஆன்லைனில்' ஆற்றுப்படுத்தும் கல்வித்துறை
-
மாணவர்களின் சாதனைக்கு ஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளி
-
முத்து முத்தாய் மதிப்பெண் முத்துார் விவேகானந்தா அசத்தல்
-
ஆற்றில் மூழ்கி சிறுமி பலி
-
பெயரில் மட்டுமல்ல தேர்ச்சியிலும் 'சென்சுரி'
-
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லுாரியில் படிக்கும் போதே கிடைக்குது வேலை
Advertisement
Advertisement