பாரூர் பெரிய ஏரியில் செம்மண் கடத்தல் மக்கள் எதிர்ப்பால் தாசில்தார் விசாரணை
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் கிராவல் மற்றும் செம்மண் அள்ளப்பட்டு வருகிறது. அரசு விதிமுறையான இரண்டு முதல் மூன்று அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி அள்ள வேண்டும்., அதேபோல் காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரையும் ஜே.சி.பி., டிராக்டர்கள் பதிவெண்களை வைத்து அனுமதி பெற்று மண் எடுத்துச்செல்ல வேண்டும் என்பது விதி.
ஆனால் விதிகளை காற்றில் பறக்கவிட்டு, வெற்றிலைகாரனூர் பகுதியில், நேற்று விதிமுறை மீறி ஐந்து முதல், 10 அடி ஆழம் வரை ஆங்காங்கே குழி தோண்டி, மண் அள்ளுவதாகவும், அதேபோல் காலை, 8:00 மணி முதல் மண் அனுமதி பெறாக ஜே.சி.பி., டிராக்டர்களை கொண்டு கிராவல், செம்மண் கடத்துவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமாருக்கு மொபைல் போன் மூலம் புகார் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்ட போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா கூறியதாவது:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை நிரம்பி, தற்போது உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பாரூர் ஏரி இன்று மாலைக்குள் நிரம்பிவிடும் என்பதால் அனுமதி பெற்று கிராவல், செம்மண் எடுப்பவர்கள் காலை 8:00 மணிக்கு ஏரிக்கு சென்று மண் எடுத்துச்செல்வதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. விதிமீறிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
பல்லடம் அடுக்குமாடி குடியிருப்பு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
-
பயங்கரவாத கும்பலை கூண்டோடு ஒழிக்க விவசாயிகள் ஆவேசம்
-
ரோட்டில் பாயும் கழிவு நீர் சுகாதார சீர்கேடு அபாயம்
-
மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: பஞ்சாப் அரசு உத்தரவு
-
வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம்!
-
அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்