ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சிறப்பிடம்
தர்மபுரி, மே ௯பிளஸ் 2 பொது தேர்வில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, மாணவர்கள் மாவட்ட அளவில் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் சௌந்தர்யா, 600க்கு 592 மதிப்பெண் பெற்று முதலிடமும், பிரவின்குமார், ஐஸ்வர்யா தேவி ஆகியோர், 600க்கு 589 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், பூங்கொடி, 586 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் தமிழ்மணி, சஞ்சய் ஆகியோர் 587 மதிப்பெண் பெற்று முதலிடமும், மோகிதா, 585 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், ரிதப்பிரியன், 581 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது. கல்விக்குழும தலைவர் இளங்கோவன், மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். பள்ளி தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குநர்கள் பிரேம், சினேகா பிரவின், தலைமைசெயல்பாட்டு அலுவலர் சந்திரபானு, மூத்த முதல்வர் பெட்ரிக் சாம், பள்ளிகளின் முதல்வர்கள் பத்மா, ஜெயசீலன், ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு